• May 12 2024

பிக்பாஸ் வீட்டில் தலைதூக்கிய சாதிப்பிரச்சனை! தவறென சுட்டிக்காட்டிய மாயாவுக்கு மணி கொடுத்த பதிலடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் தாெலைக்காட்சியில்  பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. 

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்,  மூன்றாவாரத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாமினேஷன் படலம் முடிந்தபிறகு ஐஷுவிடம் மணி சந்திரா தன்னுடைய சாதி குறித்து கேட்பதாக ஒரு புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களில் யாரும் முன்வைக்காத ஒரு குற்றச்சாட்டு இதுவாகும். மணி அப்படி கேட்டதை நிகழ்ச்சியில் காட்டவில்லை என்றாலும் அதுகுறித்த விளக்கத்தை அவரே பின்னர் கொடுத்தார்.

இதையடுத்து இந்த சீசனின் முதல் நாமினேஷன் தொடங்கியது.  ஒவ்வொருவராக நாமினேட் செய்துமுடித்த பின் பிரதீப், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, அக்‌ஷயா, கூல் சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா, விஷ்ணு ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தனர்.


இதன்போது, மணியை நாமினேட் செய்த மாயா 'மணி ஒரு பிற்போக்குவாதி' என்று வெளிப்படையாக கூறினார். நாமினேஷன் முடிந்த ஐஷுவிடன் தனியாக பேசிக் கொண்டிருந்த மாயா, 'மணி என்னிடம் சாதி குறித்து கேட்கிறான். அது எவ்ளோ பெரிய தப்பு?' என்று குற்றம்சாட்டினார். 

ஆனால் மணி அப்படி கேட்டதற்கு முந்தைய எபிசோட்களில்  எந்த ஆதாரமும் சிக்கவில்லையே என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஜோவிகாவிடம் அந்த சம்பவத்தை விவரித்தார் மணி. 

சிக்கன் கிரேவி மட்டும் ஊற்றிக் கொண்டு கறி சாப்பிடாத மாயாவிடம், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி, நீ அந்த சாதியா? என்று தான் கேட்டதாகவும், அதற்கு மாயா, 'இப்படியெல்லாம் கேட்காதே! இது மிகவும் தவறு' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் ஜோவிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மணி.

ஒருவர் அசைவம் சாப்பிடவில்லை என்பதற்காகவே அவரிடம் போய் நீ இன்ன சாதியா என்று கேட்பது அப்பட்டமான பிற்போக்குத்தனமன்றி வேறு என்ன? இதனை நாமினேஷனின் போது மாயா மறைமுகமாக குறிப்பிட்டதிலும் எந்த தவறும் இல்லை. 

எனினும், தன்னை இந்த காரணத்துக்காகத்தான் மாயா அப்படி சொன்னார் என்று தெரிந்தும் கூட, 'இவ்வளவுதான் நடந்தது' என்று கூலாக ஜோவிகாவிடம் மணி சொல்கிறார். இதன்மூலம் தான் அப்படி கேட்டது தவறு என்று கூட அவர் உணரவில்லையென புரிகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement