தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தில் நடிகர் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பாக அவர் வில்லன் வேடத்தில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 171’ என்ற படத்தில் நடிக்க மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் வில்லனாக இந்த படத்தில் நடிப்பது உறுதி என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள மோகன் தரப்பு ’தலைவர் 171’ படத்தில் நடிக்க மோகன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இது குறித்து அவரிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஒருவேளை இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தினால் கூட இனிமேல் வில்லனாக அவர் நடிக்க மாட்டார் என்றும் ஏனெனில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹரா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து அதன் பிறகு அவர் நாயகனாக மட்டுமே நடிப்பார் என்றும் அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
‘ஹரா’ திரைப்படம் ரிலீஸ் ஆக காலதாமதம் ஆகும் என்பதால் தான் விஜய்யின் ’கோட்’ படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தாகவும் ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் ‘ஹரா’ வெளியாக உள்ளதை அடுத்து அதன் பிறகு வில்லனாக மோகன் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மோகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதை அடுத்து இனிமேல் அவர் வில்லனாக நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது.
Listen News!