• Jan 19 2025

’பிக்பாஸ்’ சீசன் 8.. பிள்ளையார் சுழி போட்ட ஜோயா.. காதலனுடன் செல்கிறாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக் பாஸ் இதுவரை 7 சீசன்கள் சிறப்பாக ஒளிபரப்பானதை அடுத்து தற்போது ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 முடிந்தவுடன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இப்போது போட்டியாளர்கள் குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் முதல் கட்டமாக ’குக் வித் கோமாளி’ போட்டியாளர் ஜோயா மற்றும் அவருடைய காதலர் டிடிஎப் வாசன் ஆகிய இருவரையும் ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



கடந்த சீசனில் மணி மற்றும் ரவீனா ஜோடி கலகலப்பாக இருந்த நிலையில் அடுத்த சீசனில் டிடிஎஃப் வாசன் - ஜோயா ஜோடி கலகலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பர் முதல் பிக் பாஸ் சீசன் 8 தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் அந்தோணி விஷயத்தில் கமல்ஹாசனின் பெயர் கெட்டுவிட்டதை அடுத்து இந்த முறை வேறு பிரபல நடிகர் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement