• Apr 27 2024

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? திடீரென பரபரப்பு விளக்கத்தை கொடுத்த தீனா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வில்லன் நடிகர் சாய் தீனா, புத்த மதத்திற்கு மாறிய நிலையில் தற்போது புத்த மதத்திற்கு மாறியது ஏன் என்பது பற்றி  என்று முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

 ஒரு விளம்பரப் பலகை கலைஞராகத்தான் மீடியாவின் உள்ளே நுழைந்து அதன் பின் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் தீனா. கமலஹாசனின் இயக்கி நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ' விருமாண்டி ' திரைப்படத்தில் சிறைவார்டானாக நடித்து முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் தீனா.

எனினும் இதை தொடர்ந்து புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். மேலும் இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். அத்தோடு , இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். எனினும் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ' எதற்கும்  துணிந்தவன் ' படத்தில் தீனா நடித்து இருந்தார்.


சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவரின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. ஒரு பக்கம் நடிப்பிலும் மற்றொரு பக்கம், எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உதவும் உள்ளம் கொண்டவர்.  கொரோனா தொற்றால்  வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு இவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். அத்தோடு திரைத்துறையை சேர்ந்த பலருக்கு பல்வேறு உதவிகளையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னால் முடிந்த மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார். படத்தில் வில்லனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஹீரோ என இவரை புகழ்ந்து தள்ளும் பல ரசிகர்களும்  உள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் சாய் தீனா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது பரபரப்பாக பேசப்பட்டது. புத்த துறவி மௌரிய முன்னிலையில் புத்த மதத்தை தழுவதற்காக 22 விதிகளை சொல்லி நடிகர் தீனா புத்த மதத்திற்கு மாறினார். இந்நிலையில் இது குறித்து நடிகர் சாய் தீனா கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது... " நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன்.


அத்தோடு நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான். இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்று சொல்வது தவறான ஒன்று. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. அத்தோடு என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஜாதி ஒரு சாக்கடை, குப்பை.." எனவே ஜாதிகள் இல்லாத மதமான புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement