• Nov 29 2022

கமலின் 233-வது திரைப்படத்தின் இயக்குநர் இவர் தனாம்-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவர்  தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து அவரின் முக்கிய திரைப்படங்கள் உருவாக உள்ளது.

அதன்படி சமீபத்தில் தான் கமல் - மணிரத்னம் கூட்டணியில் 234-வது திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக  கூறியுள்ளனர்.


ஆனால் அப்போதே கமல் - எச்.வினோத் கூட்டணியின் அறிவிப்பு தான் வர இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே தற்போது மீண்டும் கமல் - எச்.வினோத் கூட்டணி திரைப்படத்தின் தகவல்கள் பரவி வருகின்றன.

அதன்படி 233-வது திரைப்படத்திற்காக அந்த கூட்டணி அமைய இருப்பதாகவும், 234-வது திரைப்படத்திற்கு முன்பே இப்படத்தை மிக குறுகிய நாட்களில் முடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.