• May 05 2024

யார் நீங்கள்?.. விமர்சனம் செய்தவர்களை கலாய்த்து சுஹாசினி போட்ட ட்வீட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பொன்னியின் செல்வன் படத்தை ட்விட்டரில் விமர்சனம் எழுதியவரை சுஹாசினி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ள வியடம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் படம் இன்று காலை வெளியான நிலையில், ரசிகர்கள் திரைப்படத்தை திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியன் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட  பல மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பண்டய கால கருவிகளான எக்காளம், நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, கிடுகிட்டி, சுந்தரவளைவு, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்பு ஆகிய வாத்தியங்களை  சிறப்பாக பயன்படுத்தி உள்ளனர்.அத்தோடு  பொன்னி நதி, சோழா சோழா என அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறுஇருக்கையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முதல் விமர்சனமாக நேற்றே ட்விட்டரில் ஒருவர் ட்விட் போட்டிருந்தார். மேலும் அதில், பொன்னியின் செல்வன் 1 அற்புதமான சினிமா சாகா டிசைனிங் விஎஃப்எக்ஸ் சீயான், கார்த்தி அழகாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மீண்டும் வந்துள்ளார். ஒட்டுமொத்தமாக பிரமிக்க வைக்கிறது, சில திருப்பங்கள் மற்றும் கைதட்டல் தகுந்த தருணங்களுடன் ஒரு கண்ணியமான வரலாற்று சரித்திரம் என பதிவிட்டிருந்தார்.

மேலும்  அவரின் இந்த ட்விட்க்கு கீழ் சுஹாசினி மணிரத்னம், யார் நீங்கள்? இன்னும் வெளியே வராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது? என்று தரமாக  கேள்வி எழுப்பியுள்ளார். சுஹாசினி மணிரத்னம் பகிர்ந்த இந்த ட்வீட் இணையத்தில் தற்போது பெரும்  பேசுபொருளாக உள்ளது.


முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விழாவில் பேசிய சுஹாசினி. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாட்கள் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில்தான் நடந்துள்ளது. ஆகையால் இது தெலுங்கு மக்களின் படம். நீங்கள்தான் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement