• May 04 2024

அப்பாவுடன் சேர்ந்து எப்போ நடிக்கப் போறீங்க-மெகா ஸ்டாரோட பையனே இப்படி சொல்லிட்டார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் துல்கர் சல்மான்.மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.

இப்போது தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளிலும் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் அவருடன் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மான் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்திருந்தாலும், அவருக்கு அதிரடியான ஆக்சன் காட்சிகள் இல்லை எனவும், வழக்கம்போல் லவ்லியான ரொமாண்டிக் ஹீரோவாக தோன்றுவார் என்றும் தெரிகிறது.'சீதா ராமம்' சூட்டிங் தொடங்கப்பட்டதில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. 'சீதா ராமம்' படத்தின் பாடல்கள், டீசர் அனைவரிடமும் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற 'சீதா ராமம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டிலும், துல்கர் சல்மான் பேசியது வைரலாகி வருகிறது. இதில், அவரது அப்பா மம்மூட்டியுடன் சேர்ந்து நடிப்பது குறித்து துல்கர் சல்மானிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர், "எனக்கு அப்பாவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தான், நானே இதுபற்றி என் தந்தை மம்மூட்டியிடம் பலமுறை கேட்டுவிட்டேன். ஆனாலும், அவர் தான் இன்னும் பதில் கூறவில்லை, நானும் அவரது முடிவுக்காக காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்மூட்டியிடம், "துல்கருடன் சேர்ந்து நடிப்பீங்களா" என மிர்ச்சி சிவா கேள்வி கேட்டிருந்தார். அதுக்கு பதிலளித்த மம்மூட்டி, "என்னுடன் சேர்ந்து நடிக்க, துல்கருக்கு விருப்பமான்னு தெரியலையே, இத அவர்கிட்ட தான் கேட்கணும்" எனக் கூறியிருந்தார். தற்போது துல்கர் சல்மானும் மம்மூட்டியுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement