• May 19 2024

எப்புர்றா...? வெளிநாட்டில் குரங்கோடு செல்ஃபி எடுத்த அமலாபால்...செம்ம ட்ரெண்டிங்காகும் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால்  மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க ஒரு விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அந்த படத்தின் மூலம்நல்ல வரவேற்பை பெற்றார். 

 விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களுடன்  இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். 

அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.


நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அமலாபால், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

குரங்கு ஒன்றை அமலாபால் தனது மடியில் வைத்து இருப்பது போல புகைப்படங்கள் அமைந்துள்ளன. மேலும் குரங்குடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் அமலாபால் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது செம ரெண்டிங் ஆகி வருகிறது.










Advertisement

Advertisement