• May 18 2024

முதன் முறையாக மாதவனுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் எப்போதுமே பிசியாக இருந்து வரும் நயன்தாரா அடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று தற்போது லீக்காகி உள்ளது. 


அதாவது யாரடி நீ மோகினி பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றிலேயே நடிக்கவுள்ளார். யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மித்ரன் ஜவஹர், குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சாக்லேட் பாய் நடிகரான மாதவன் ஹீரோவாக நடிப்பதாக மித்ரன் ஜவஹர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏற்கெனவே அறிவித்தார்.


இந்நிலையில் மித்ரன் ஜவஹர் - மாதவன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமூக வளையத்தளங்களில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள நயன்தாரா மாதவனுடன் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 


இந்நிலையில் தற்போது அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் ஆனது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Advertisement