• Jun 04 2023

குணசேகரனை எதிர்த்துப் பேசிய ஷக்தி... ஜனனியை அடிக்கப் பாய்ந்த கதிர்... முற்றிய சண்டை... 'எதிர்நீச்சல்' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ விறுவிறுப்புடன் அமர்க்களமாக வெளிவந்திருக்கின்றது.


அதில் ஷக்தி "எனக்கு உரிமை இருக்கு நான் போய் அப்பத்தாவை பார்ப்பேன்" எனக் கூறுகின்றார். அதற்கு குணசேகரன் "அந்தக் கிழவிக்கு நீங்க எல்லாம் என்னடா செய்திருக்கிறீங்க" எனக் கோபத்துடன் கேட்கின்றார்.பின்னர் ஷக்தி "நீங்க என்ன செய்தீங்க அவங்களுக்கு" என குணசேகரனையே எதிர்த்துப் பேசுகின்றார்.


மேலும் ஜனனி "என் அப்பத்தாவை பார்க்கணும் முடியுமா முடியாதா" எனக் கேட்கின்றார். அதற்கு கதிர் " முடியாது" எனக் கத்துகின்றார். பின்னர் ஜனனி அவர்களையும் மீறி பார்க்க செல்ல முற்படுகின்றார். அந்த சமயத்தில் கதிர் ஜனனியைத் தடுத்து மாடிப்படியில் இழுத்து வருகின்றார். 


அத்தோடு கதிர் ஜனனிக்கு அடிக்கும் வகையில் பாய்கின்றார். குடும்பத்தில் உள்ள ஏனையவர்கள் அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர். அத்தோடு ஜனனியும் பதிலுக்கு கதிரைக் கை நீட்டிப் பேசுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. இனி நடக்கப் போவது என்ன என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement