• May 29 2023

தொடரும் சோகம்... இளையராஜா குடும்பத்தில் திடீர் மரணம்... கண்ணீரில் திரையுலகம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகரான இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் காலத்தை வென்று எல்லா தலைமுறையினராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இளையராஜா மட்டுமல்லாது இவரின் குடும்பத்தினர் பலரும் இசைத்துறையில் பணியாற்றி உள்ளனர். 


அந்த வரிசையில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனும், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், என பன்முகத்திறமை கொண்ட ஒரு கலைஞ்சராகத் திகழ்ந்து வந்தார். இருப்பினும் இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு பாவலர் சிவன் என்ற மகனும் இருந்தார். கிதார் இசைக்கலைஞரான இவர் இளையராஜாவின் இசைக்குழுவின் சில ஆண்டுகள் திறம்பட பயணித்து வந்தார். 

அதுமட்டுமல்லாது ஓரிரு படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் வசித்து வந்த இளையராஜாவின் அண்ணன் மகனான சிவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென மரணமடைந்தார்.


இவரின் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement