• May 03 2024

கமல் - மணிரத்னம் கூட்டணி என்னதான் ஆச்சு?..வெளியான லேட்டஸ் அப்டேட்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பெரும் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்து ரீ என் ட்ரி கொடுத்தார். விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார்.

மேலும் இந்தியன் 2 படத்தின் க்ளைமேக்ச் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சூரத்தில் நடந்த ஷெட்யூல் முடிந்தது.

விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கமல் ஹாசன் - மணிரத்னம் இணைந்த நாயகன் திரைப்படம் இந்தியா சினிமாக்களில் அழிக்க முடியாத க்ளாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னத்துடன் கமல் இணையும் படம்தான் முதலில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஹெச்.வினோத்துடன் இணையும் படம்தான் முதலில் தொடங்கப்படும் என கருதப்படுகிறது.அதற்கேற்றபடி சமீபத்தில் நெல் ஜெயராமன் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனுடன் ஹெச்.வினோத்தும் கலந்துகொண்டார். எனவே இருவரும் இணையும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குவது உறுதி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிரத்னமும், கமல் ஹாசனும் இணையும் படம் பற்றிய அப்டேட் எதுவுமே வரவில்லையே என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். தற்போது அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கொடைக்கானலில் இருக்கும் தனது வீட்டில் இருந்தபடி கமல் ஹாசனுடன் இணையும் படத்துகான கதையை தயார் செய்யும் பணியில் மணிரத்னம் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement