• May 06 2024

சந்திரமுகி பாம்பிற்கு என்னதான் ஆச்சு... அது எப்படி வெளிய போச்சு... ரகசியத்தை போட்டுடைத்த இயக்குநர் வாசு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான படமே 'சந்திரமுகி'. இப்படமானது ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, வடிவேலு, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ஒரு படமாகும். 'பாபா' திரைப்படத்தின் படுதோல்வியை தொடர்ந்து வீறு கொண்டெழுந்த ரஜினி சந்திரமுகி திரைப்படத்தில் சொல்லி அடித்து வெற்றியை நிலை நாட்டினார்.


இப்படம் ஆனது வெளியாகி பல ஆண்டுகளைக் கடந்திருப்பினும் இன்றுவரை யாராலும்  அப்படத்தின் கதையை மறக்க முடியாது. இந்நிலையில் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பெரிய நீளமான பாம்பை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை இயக்குநர் பி. வாசு அவர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.

அதாவது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் என்ற ஒன்று மிகவும் பிரபலமானபோது, பல படங்களில் இருக்கும் தேவையில்லாத கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் என்பவற்றை குறித்து அவற்றை வரிசைப்படுத்தி சில படங்களை நகைச்சுவையாக கூறி வந்தனர்.

அந்த வரிசையில் சந்திரமுகி பாம்பும் இடம் பெற்றிருந்தது. ஏனெனில் குறிப்பாக ஒரு படத்தில் யாரேனும் நடிகர் தேவையில்லாமல் நடித்திருந்தால் அவரும் சந்திரமுகி பாம்பும் ஒன்றுதான், அவருக்கு அந்தப் படத்தில் வேலையே இல்லை என்று கூறி மீம்ஸ் வெளியிடுவார்கள். அந்த அளவிற்கு சந்திரமுகி படத்தில் வந்த அந்தப் பாம்பு பிரபலமானது.


இந்நிலையில் தற்போது லைக்கா நிறுவனத்தில் 'சந்திரமுகி' படத்தின் உடைய இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் பீ.வாசு. இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றிலேயே அந்தப் பாம்பை பற்றி கூறியுள்ளார். 


அதாவது "ஒவ்வொரு முறையும் ஜோதிகா சந்திரமுகி அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுதான் ஆடுவாள். பிறகு வெளியே வந்ததும் அதனை சாத்தி விட்டு வந்துவிடுவாள். ஆனால் நன்கு கவனித்தீர்கள் என்றால் ரா ரா பாடலில் ரஜினிகாந்த் பாடிக் கொண்டே ஜோதிகாவை வெளியே அழைத்து வருவார். ஜோதிகாவும் மெய்மறந்து அப்படியே வந்துவிடுவார்" எனக் கூறியிருந்தார்.

மேலும் "அந்த கதவு சாத்தப்படாததை யாரும் கவனிக்கவே இல்லை. அதுவரை பாதுகாக்கப்பட்ட சந்திரமுகியின் பொக்கிஷம் அருகில் இருந்த பாம்பு, சந்திரமுகி சாந்தமடைந்ததால் வீட்டைவிட்டு வெளியே போயிருக்கும். அந்த பாம்பு எங்கிருந்து வந்தது, ஏன் போனது என்பதை பற்றி இரண்டாம் பாகத்தில் நான் கூறுகிறேன்" என்று அந்தப் பாம்பு தொடர்பான சுவாரஸ்யமான தகவலைக் கூறியுள்ளார் பீ.வாசு.

Advertisement

Advertisement

Advertisement