• Apr 19 2025

ரோகிணிக்கு நடந்த விபரீதம்..? முத்துவின் காரை சீஸ் செய்த டிராபிக்.. இன்றைய சிறகடிக்க ஆசை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரோகிணிக்கு பேய் பிடித்ததாக அவரை பார்வதி வீட்டுக்கு கூட்டி வருகின்றார்கள். அங்கு சாமியார் ஒருவரும் வருகின்றார். அதன் பின்பு ரோகினியை உட்கார வைத்து சமீபத்தில் இவருடைய உறவினர் யாரும் இறந்ததா? என்று கேட்க, உடனே விஜயா அவருடைய அப்பா இறந்ததாக சொல்கின்றார்.

இதனால் அவருடைய ஆத்மா தான் இந்த பொண்ணுக்குள்ள இருக்குது என்று சொல்லுகின்றார். ரோகினி இது சரியான போலி சாமியார் இதனை வெளியில் சொல்லவும் முடியாது என அமர்ந்து இருக்க, அவர் பேயை விரட்டுவதாக கூறி ரோகிணியை தடியால் அடிக்கின்றார். வலி தாங்க முடியாமல் ரோகிணி கதறுகின்றார்.

d_i_a

ஆனாலும் குறித்த சாமியார் இப்படி அடித்தால் தான் ஆத்மா வெளியேறும் என்று சொன்னதோடு மனோஜுக்கும் ஒரு தடியை கொடுத்து தினமும் ரோகிணிக்கு அடிக்குமாறு சொல்லுகின்றார். ரோகினி வலி தாங்க முடியாமல் ரூமுக்குள் சென்று அழுகின்றார்.


இன்னொரு பக்கம் முத்துவின் காரில் சவாரி வந்த நபர் ஒருவர், தனது அப்பா இறந்து விட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ட்ரெயினை பிடிக்காவிட்டால் அவருடைய முகத்தை பார்க்க முடியாது எனவும் பேச, எப்படியாவது ட்ரெயினை பிடித்து விடலாம் என்று முத்து வேகமாக காரை ஒட்டி செல்கின்றார். இதன் போது முத்துவுடன் பிரச்சனை செய்த டிராபிக் அதிகாரி காரை நிறுத்தவும் முத்து காரை நிறுத்தாமல் செல்லுகின்றார்.

இதனால் பின் தொடர்ந்த டிராபிக் அதிகாரி இறுதியில் முத்துவை பிடித்து காரின் சாவியை எடுத்ததோடு மட்டுமில்லாமல் காரை தூக்கிச் செல்கின்றார்கள். இதனால் முத்து கோபத்தில் இருக்க, அங்கு வந்த மீனா நீங்க நோ என்ட்ரியில் போனதும் தப்பு தான் என பேசுகின்றார். இதனால் முத்து கோபப்பட்டு எதுவும் கதைக்க வேண்டாம் என்று மீனாவுக்கு திட்டி அனுப்புகின்றார்.

 இறுதியில் மீனா போன முறை முத்துவை காப்பாற்றிய அதிகாரியின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவிக்கு பூ மாலையை கொடுத்துவிட்டு நடந்த சம்பவத்தைப் பற்றி சொல்லி மீண்டும் உதவி செய்யுமாறு கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement