• Apr 21 2026

" தாய் கிழவி" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக ‘தாய் கிழவி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். முதல் படமாக இருந்தாலும், வலுவான கதையம்சத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் தயாராகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தப் படத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராதிகா, இந்தப் படத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சி மிக்க வேடத்தில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ‘தாய் கிழவி’ படத்தில், அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் வருகிற 27-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதனால், படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement