• May 05 2024

பாவாடை தாவணியில்.. குறையாத கிளாமர் காட்டும் பூஜா ஹெக்டே.. ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. அதுமட்டுமல்லாது இவர் தமிழிலும் 'முகமூடி, பீஸ்ட்' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


அந்தவகையில் பூஜா ஹெக்டே தற்போது இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படமானது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே உடன் மலையாள நடிகை சம்யுக்தா மேனனும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படமானது தயாராகி வருகிறது.


இந்நிலையில் தற்போது பளபளக்கும் கிளாமர் உடை அணிந்து கலக்கிய பூஜா ஹெக்டேயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement