• May 29 2023

கண்கலங்கி மன்றாடிய காவியா... மறுப்புத் தெரிவிக்கும் பிரியா... ஜீவாவை ஏற்றுக் கொள்வாரா..? 'ஈரமான ரோஜாவே-2' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 

அதில் பிரியா தனியா ஒரு ஊஞ்சலில் யோசித்தவாறு அமர்ந்திருக்கின்றார். அங்கு வந்த காவ்யா "ஜீவா பழசு எல்லாம் மறந்திட்டு ஒரு புது மனுஷனா உன் முன்னாடி நிக்கிறாரு, அவரை ஏத்துக்கிட்டு சந்தோஷமாக வாழ ஆரம்பி" எனக் கூறிக் கண் கலங்குகின்றார்.


மறுபுறம் பிரியாவிடம் வந்த ஜீவாவை பிரியா போகுமாறு கூறுகின்றார். அதற்கு ஜீவா போறதற்கு எல்லாம் நான் வரல, உங்கள சமாதானப்படுத்தி என் கூட கூட்டிற்று போகலாம் என்று தான் வந்திருக்கேன் எனக் கூறுகின்றார். 

அதற்கு பிரியா டைம் வேஸ்ட் பண்ணாமல் இங்க இருந்து போங்க, அதை யாராலயும் மாத்தவும் முடியாது யாருக்காகவும் மாத்திக்கவும் முடியாது என்கிறார். அதற்கு ஜீவா மாத்திட்டால்... என இழுக்கின்றார். அதற்கு பிரியாவும் உங்களால முடியாது என்கிறார்.

பின்னர் ஜீவா "நான் ஜெயிச்சிட்டால் நீங்க என்கூட வந்திடணும், நீங்க ஜெயிச்சிட்டால் உங்கள விட்டிட்டு நான் போய்டுறேன் என்கிறார்.   


Advertisement

Advertisement

Advertisement