• Apr 19 2024

பந்தை ஓங்கி அடிச்சு தூள் கிளப்பிய நடிகை நமீதா… பேட்டிங்.. பெளலிங்.. இரண்டுமே தெரியும்! வியந்து பார்த்த ரசிகர்கள்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

தமிழே அழகான மொழி, அதுவும் நமீதாக வாயில் இருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழை கேட்கவே ஒரு கூட்டம் நமீதா பின்னாள் சுற்றிக்கொண்டு இருந்தது. அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டியில் கூறியிருந்தார். உடல் எடை அதிகரித்த நமீதாவிற்கு அதன் பிறகு படவாய்ப்பு குறைந்ததால்,  மானாட மயிலாடு நிகழ்ச்சிகளில் நடுவாராக இருந்தார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் தாக்கு பிடிக்க முடியாததால், 28 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

 இதையடுத்து, 2017 ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளேன். இதைப்பார்த்த நமீதாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை பிறந்ததை அடுத்து நீண்டநாட்கள் வெளியில் வராமல் இருந்த நமீதா, தற்போது, கோவை தெற்கு பாஜக சார்பில் பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் நமீதா,பேட்டிங்.. பெளலிங் ரெண்டுமே தெரியும் என பந்துகளை சிக்ஸருக்கு அடித்து தூள் கிளப்பினார். நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோக்களும் போட்டோவும் இணையத்தில் தீயாய் பரவுகிறது.


Advertisement

Advertisement

Advertisement