• Jan 19 2025

40 ஆயிரம் பணம் வேணுமா? முந்திக்கொள்ளுங்க... இர்ஃபான் சொன்ன குட் நியூஸ்! அலட்டான சப்ஸ்கிரைபர்ஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

யூடியூப் சேனலில் விதவிதமான வித்தியாசமான உணவுகளை சுவைத்து அதனை ரிவ்யூ எடுத்து வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்ஃபான்.

இவருக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக காணப்படுகிறார். 

2016 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்த இர்ஃபான், ஒருகட்டத்தில் அதனை விட்டுவிலகி யூடியூபராக மாறினார். ஆனால் இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் கிளம்பியதாக பேட்டியோன்றில் கூறியுள்ளார்.


ஆனாலும், இவை அனைத்தையும் சரி செய்ய உழைத்தால் மட்டும் முடியும் என்பதை நம்பி கடுமையாக உழைத்துள்ளார். படிக்கும் காலத்தில் ஆட்டோவும் ஓடியுள்ளார்.

இவ்வாறு தனது கடின உழைப்பால் உயர்ந்த இர்ஃபானை, தற்போது பிரபல நடிகர்களும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல யூடியூபர் இர்ஃபானின் யூடியூப் சேனல் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்சை பூர்த்தி செய்யவுள்ளது. இதனால் இறுதியாக சப்ஸ்கிரைபர்ஸ் பண்ணும் நபருக்கு 40 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ, 



Advertisement

Advertisement