• May 04 2024

திடீரென ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்- அடடே இது தான் காரணமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தில் செல்வராகவனும் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மூலமாவது விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் விஷால் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படக்குழுவினர் மட்டுமின்றி விஷால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வைத்த மாணவியும் கலந்துகொண்டார்.

அந்த வகையில் நேற்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக மக்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement