• Apr 26 2024

கண்டிப்பாக காதல் திருமணம் தான் நடக்கும்... கூறிய விஷால்... மணப்பெண் யார் என்ற கேள்வியுடன் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால் 45 வயதினை அடையவுள்ள இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் குறித்த திருமணப் பேச்சுக்கள் அடிக்கடி அடிபட்ட வண்ணம் தான் இருக்கின்றன. 

அந்தவகையில் இவர் முன்னர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து பின்னர் விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஒருவருடன் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறாமல் நிச்சயதார்த்ததுடன் மட்டுமே நின்று போனது. 

மேலும் சமீபத்தில் கூட விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாக கூறப்பட்டது. இவ்வாறாக விஷாலின் திருமணம் குறித்து பல பேச்சுக்கள் எழுந்தாலும் இன்றுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்ப அறிவிப்பு வெளியாகவில்லை. 

இந்நிலையில் இவர் நேற்றைய தினம் 11 ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளமை குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


இதனைத் தொடர்ந்து பின்னர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''மனதில் என்ன தோன்றுகிறதோ அதை சொல்வேன். காசியை புதுப்பித்துள்ள பணிகளை பார்த்து பிரதமருக்கு நன்றி சொல்ல நினைத்தேன், அவ்வாறே சொல்லியும் இருக்கேன். அதற்கு பிரதமர் காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி என்று பதில் அளித்தது மேலும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது" எனக் கூறிருந்தார்.

மேலும் "இதில் அரசியல் எதுவும் இல்லை. ஒரு சாதாரண குடிமகனாக காசிக்கு சென்ற அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு அதை செய்தேன். இதேபோன்று எனக்கும் திருமணம் நடக்கும். அது நடக்கும்போது உங்களுக்கு தெரிய வரும். எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம்தான் நடக்கும்" எனவும் கூறியிருந்தார். 

அத்தோடு "நடிகர் சங்கத்தில் இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி வந்து விட்டோம். இதற்கு மேல் யாரும் தடைகள் விதிக்க முடியாது. கோர்ட்டு மூலம் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நாங்கள் நடிகர் சங்க கட்டிட வேலைகளை தொடங்கி விட்டோம்'' எனவும் கூறியிருந்தார்.

விஷால் இவ்வாறாக தனக்கு காதல் திருமணம் தான் நடக்கும் என்று கூறியதையடுத்து பல ரசிகர்களும் "மணப்பொண்ணு" யார் என்ற கேள்விக் கணைகளை அவர் மீது தொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement