• Apr 24 2024

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவுடன் ஜோடி சேர்ந்த சீரியல் நடிகர் சஞ்சீவ்- அதுவும் என்ன தொடர் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்னும் கதாப்பாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாகயாக அதாவது ராதிகா என்னும் வேடத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. இவருக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.


மேலும் இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் நல்ல ரோலில் நடித்து வந்தார்.தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நெக்கடிவ் ரோலில் நடித்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே பிரபல்யமானார்.


அதன் பின்னரே சில திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக விஷ்ணு விஷால் இயக்கத்தில் வெளியான வேலை என்று வந்திட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது புதிய காமெடி சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இதில் இவருடன் நடிகர் சஞ்சீவ் மற்றும் குமரேசன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் இது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement