• Feb 05 2025

விஷால்-அருணை பிரிக்க முடியாது! எனக்கு அந்த டீம் வேணா! முத்துக்குமரன் அதிரடி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8  நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ பின்னாலி கார்ட் எடுப்பதற்காக போட்டியாளர்கள் பயங்கரமாக டாஸ்க்குகளை விளையாடுகிறார்கள். முதலில் வெளியாகிய ப்ரோமோக்களில் டாக்ஸ் நேரத்தில் போட்டியாளர்களிடையே வாக்குவாதம் இடம்பெறுகிறது. இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த ப்ரோமோவில் முத்து" எனக்கு ஸ்ட்ரென்த் எல்லாம் இரண்டாவது எனக்கு தேவை ஜீரோவில் இருக்கும் நபர்கள்" என்று சொல்கிறார். அதற்கு மஞ்சுரி "போட்ல ஜீரோல இருக்குறவங்க வரணும்னு சொன்ன அப்போ நீ, தீபக், விஷால் இருக்கும் போது நானும் கூட சேர்ந்து இருக்கலாமே" என்று கேட்கிறார். 


விஷாலை "தனியா கூப்பிட முடியாது ஏன் என்றால் விஷால் அருணுக்கு எதிராக விளையாட மாட்டான்" என்று சொல்கிறார். அதற்கு ரயான் " விஷால்-அருணை பிரிக்கமுடியாதுனு நீ எப்படி சொல்லமுடியும் அவங்கல தனியா விளையாட விடலாம்" என்று சொல்கிறார். அதற்கு முத்து "எனக்கு தோணுது இந்த டீம் ஓகேனு சொல்லி அத ஏன் மாத்தணும் "என்று கேட்கிறார். இப்படி போட்டியாளர்களிடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அத்தோடு ப்ரோமோ நினைவடைகிறது. 

Advertisement

Advertisement