• Mar 25 2026

நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு கேட்ச் பிடித்த வீடியோ.. வினய் - விமலா ராமன் ரொமான்ஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஜாலியாக ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வினய் அதன் பிறகு ’ஜெயம்கொண்டான்’ ‘மோதி விளையாடு’ ’மிரட்டல்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இதனை அடுத்து சில படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பாக  சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ படத்தில் கூட டெரர் வில்லனாக நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை விமலா ராமனுடன் வினய் காதலில் இருப்பதாகவும் இருவரும் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சற்று முன் வினய் மற்றும் விமலா ராமன் ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் விமலா ராமனை வினய் நீச்சல் குளத்தில் தள்ளி விடுவது போன்றும், அதன் பிறகு அவரை கேட்ச் பிடித்து நிறுத்தி உள்ளது போன்ற காட்சிகள் உள்ளன.  இந்த ரொமான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.



Advertisement

Advertisement