• Apr 27 2024

பொண்ணுங்களை முன்னுக்கு அனுப்பிட்டு ஹுரோவாகப் பார்க்கிறாரு- அமுதவானணை நாறுநாறாகக் கிழிக்கும் விக்ரமன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ரேம்ப்பில் வரும் பொருட்களை யார் முதலில் கைப்பற்றுகிறார்களோ அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும்.

 இதில் அட தேனடை மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிய பெயரில் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.இதில் தினசரி இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது.


 முதல் நாளில் அசீம் மற்றும் மகேஸ்வரி இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளில் தனலட்சுமியும், மணிகண்டனும் முட்டிக்கொண்டனர். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இது ஒரு புறம் இருக்க ஹவுஸ்மேட் ஒவ்வொருத்தரும் புறம் பேசி வருவதும் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில் விக்ரமன் ஏடிகேயிடம் அமுதவாணன் என்னை எப்படியாவது வெளில அனுப்பவேண்டும் என்று என்னைப் பற்றித் தவறாகக் கூறி வருகின்றார். இத்தனை சீசன்ல இவரை மாதிரி ஒரு கேவலமான ஒருத்தரையும் நான் பார்த்ததில்லை. பொண்ணுங்கள முன்னுக்கு அனுப்பிட்டு அதுக்கு பின்னாடி நின்று பேசுறாரு.அவர் பேசிறது ஒன்றும் சரியில்லை. எது என்றாலும் முகத்திற்கு நேராகப் பேச மாட்டேன் என்று இருக்கிறாரு என ஏடிகேயிடம் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement