• Apr 20 2024

வெள்ளைத் தாடியுடன் மாஸ் கெட்டப்பில் நிற்கும் தளபதி விஜய் - வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு.இப்படத்தின் படப்பிடிப்பு யாவும் நிறைவுற்று டப்பிங் பணிகள் யாவும் நடந்து வருகின்றது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய்யை சமீபத்தில் சந்துள்ள ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.


அதில் விஜய் வெள்ளை தாடியுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் இந்தப் போட்டோ தளபதி 67 படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


மேலும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதோடு அதற்கான பணிகள் யாவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement