• Sep 25 2023

இரண்டு முறைப்படி நடக்கும் விக்ரம்-வேதா திருமணம்... அட்டகாசமாக வெளிவந்த 'Modhalum Kaadhalum' Promo Video..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான்  'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் இந்த சீரியலின் கதைப் பிரகாரம் விக்ரம்-வேதாவிற்கு கோர்ட்டில் வைத்துத் தாலி கட்டியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் கல்யாணத்தை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்கின்றனர். கல்யாணப் பத்திரிகையை அடித்த அதை இரண்டாகப் தத்தமது உறவுகளுக்கு கொடுக்கின்றனர்.


மேலும் வேதாவின் அம்மா கல்யாணத்தை தங்களது முறைப்படி தான் செய்யணும் எனக் கூற விக்ரமின் அம்மா எங்க முறைப்படி தான் செய்யணும் எனக் கூறி வாதிடுகின்றார். பின்னர் இரண்டு குடும்ப வழக்குப் படியும் இரண்டு முறை திருமணம் நடாத்துவதாக முடிவெடுக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு முறைப்படி விக்ரம்-வேதா கல்யாணம் நடக்கின்றது.  


Advertisement

Advertisement

Advertisement