• May 13 2024

சென்னையில் முதல் நாள் வசூலில் 3 வது இடத்தைப் பிடித்த விக்ரம் திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் நடிகர்களின் திரைப்படங்கள் வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய அண்ணாத்த வலிமை பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதோடு கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.சென்னையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.71 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இந்த வசூலால் கொரோனாவிற்கு பிறகு சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது விக்ரம்.

முதல் 3 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம்

பீஸ்ட்- ரூ. 1.96 கோடி
வலிமை- ரூ. 1.82 கோடி
விக்ரம்- ரூ. 1.71 கோடி
ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் முதல் நாள் சென்னையில் ரூ. 1.71 கோடி தான் வசூலித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement