• May 12 2024

விக்ரம் திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் சென்னையில் வசூல் செய்த விபரம்- செம குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு வெளியாகிய திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்பட்டது.

இப்படத்தில் முக்கிளய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் சூர்யாவும் ஹெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விமர்சனங்கள் எல்லாம் அமோகமாக வந்துள்ளது.

தமிழ் படங்களுக்கான வசூல் நிலவரத்தில் முக்கியமாக பார்க்கப்படும் சென்னையில் விக்ரம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வந்துள்ளது. அதாவது படம் முதல் நாளில் ரூ. 1.71 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதை விட அதிகமாக வசூலிக்கும் என நம்பப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement