• Jul 27 2024

கமல்ஹாசனுக்கும் அல்லு அர்ஜூனுக்கும் இடையில்.. போட்டியே இல்லாமல் ரிலீஸ் செய்யும் சியான் விக்ரம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதிக்கும் இடையில் சியான் விக்ரம் நடித்த ’தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதால் போட்டியே இல்லாமல் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 12-ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூலை 12 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய இரண்டு தேதிகளுக்கு இடையே ஜூலை 25ஆம் தேதி ’தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . ‘இந்தியன் 2 ’படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரம் கழித்து, ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரம் முன்பு ’தங்கலான்’ வெளியாக இருப்பதால் இந்த படம் போட்டியே இன்றி வெளியாக இருப்பதாக கருதப்படுகிறது.

அந்த தேதியில் இதுவரை வேறு எந்த பெரிய படமும் ரிலீஸ் இல்லை என்பதால் ’தங்கலான்’ படத்தின் ஆரம்பகட்ட வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement