• Jun 26 2024

குக் வித் கோமாளியில் கதறியழுத ஷாலினி சோயா..! சக கோமாளிகள் செய்த காரியம்! வைரல் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி சீசன் 5. இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்களை கடந்த நிலையில் இதில் பங்கு பற்றிய ஷாலினி சோயா பலரது மனதை கவர்ந்து விட்டார்.

மலையாள நடிகையாக காணப்படும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அத்துடன் பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசனின் காதலி என்ற அறிமுகத்துடனும் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானார். 


இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அவர் இயல்பாகவே தமிழில் சரளமாக பேச முடியாமல், திக்கி திக்கி பேசும் அவரது கொஞ்சும் தமிழும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவருக்கென்று பேன்ஸ் பேஜும் உருவாகியுள்ளன.


இந்த நிலையில் தற்போது இறுதியாக இடம் பெற்ற குக் வித் கோமாளி சீசன் 5 எபிசோட்டில், ஷாலினி சோயா அழுத காட்சிகள் படு வைரலாகி உள்ளன. 

அதாவது குறித்த நிகழ்ச்சியில் கலகலப்பாக காணப்படும் ஷாலினி சோயாவை செஃப் தாமு ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என வினாவி இருந்தார். அதற்கு அவர், மனசு கஷ்டமாக இருக்கு. நான் மட்டும் மொக்கையா சமைக்கிறேன் என சொல்லி அழுதுள்ளார். 

இதை பார்த்த சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்துள்ளார்கள். தற்போது ஷாலினி அழுத காட்சிகள் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement