• Jan 18 2025

இனிமே ஒத்த உசுரு கூட போக கூடாது' நிவாரண உதவி வழங்கியதைத் தொடர்ந்து மக்களுக்காக விஜய் செய்த காரியம்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


திருநெல்வேலியில் நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கினார். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட இப்படியெல்லாம் செய்யவில்லை. ஆனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று ஏகப்பட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மேலும், மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாயும், வீடுகளை இழந்து தவித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி உள்ளார் விஜய்.


நடிகர் விஜய்யை பார்த்ததுமே நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் மொத்தமும் அந்த இடத்துக்கு படையெடுத்து வந்து விட்டனர். மெயின் கேட்டை எல்லாம் மூடி பக்காவான போலீஸ் பாதுகாப்புடன் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் வெள்ள நிவாரண விழா சிறப்பாகவே நடைபெற்றது.

நிகழ்ச்சியை சரியாக நடத்துவதற்காக புஸ்ஸி ஆனந்த் ஒரே ஆளாக அனைவரையும் மிரட்டி உருட்டி பேசிய பேச்சுக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டன.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது விஜய் திருநெல்வேலி மக்களுக்காக ஒரு ஆம்புலன்ஸையும் இலவசமாக வழங்கியுள்ளாராம்.இதனால் விஜய் ரசிகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement