• May 12 2024

'மாவீரன்' FDFS பார்க்க வந்த விஜய்யின் மனைவி சங்கீதா... படம் பிடித்த கேமெராக்கள்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்தின் முதல் காட்சியை பார்க்க காலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கிற்கு குவிய ஆரம்பித்து விட்டனர்.


மேலும் வடசென்னை பின்னணியில் அரசியல் கதைக்களமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. அத்தோடு மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வானத்திலிருந்து கேட்கும் அசரீரி குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா பல மாதங்களுக்கு பின் இன்றைய தினம் வெளியில் தலைக்காட்டியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தினை பார்க்க இவர் பிரபல தியேட்டருக்கு வந்துள்ளார்.


இவரைக் கண்டதும் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் ஓடிசென்று கேமெராவில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement