• May 08 2024

திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய்யின் பள்ளிப் பருவப் புகைப்படம் - தளபதியின் ஆசிரியர் யாரென்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் தனது அயராத முயற்சியினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவரது படங்கள் பொதுவாகவே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதும் தெரிந்த விடயமே.

இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இருப்பினும் அப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் வசூலில் மட்டும் அள்ளிக் குவித்தது.


அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இவருடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.


இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருவதுண்டு.அதன்படி விஜய் அவரின் பள்ளி பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 

அதில் விஜய் அவரின் பள்ளி ஆசிரியருடன் அமர்ந்திருக்கிறார்.இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement