• Sep 13 2024

ஜெயிலர் பட வெற்றிக்கு காரணம் விஜய் ரசிகர்கள் தான்... அதுவும் எப்படித் தெரியுமா..? பயில்வான் பகிர்ந்த தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.


அந்தவகையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது.

இந்நிலையில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப்படம் குறித்து அதிரடியான பல கருத்துக்கள், விமர்சனங்களை முன்வைத்து வரும் பயில்வான் ரங்கநாதன் 'ஜெயிலர்' படம் குறித்தும் பல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றார். 


அந்தவகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் ஜெயிலர் படத்தை உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான் எனக் கூறியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்குத்தான் என்று சொல்லி, ரஜினி வைத்திருந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடுங்குவதற்கு விஜய் ரசிகர்கள் சதி செய்திருந்தனர்.

இந்த விடயம் தான் ஜெயிலர் படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிய காரணம். எனவே ரஜினியின் ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் தான் என பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement