• Apr 28 2026

விஜய்யின் பரப்புரை திடீரென ரத்து - என்ன காரணம்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய், தனது திரையுலக வாழ்க்கையில் பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். பல வெற்றிப் படங்கள் மூலம் பல வசூல் சாதனைகளை படைத்த அவர், இளைஞர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நடிகராகவே கருதப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து சமீப காலமாகவே தன்னுடைய கவனத்தை அரசியல் பக்கம் திருப்பியுள்ளார். அதற்காகவே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பரப்புரைகளை மேற்கொண்டு மக்களிடம் நேரடித் தொடர்பை வைத்து வருகிறார்.

சினிமாவில் பயணித்த விஜய்யின் இந்த திடீர் மாற்றம், அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அவருடைய அடுத்த நடவடிக்கை குறித்து பலரும் பலவித எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.


இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கையை முன்னிட்டு வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் தொகுதிகளில் பரப்புரை செய்ய இருந்த  நிலையில், அந்தப் பயணம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது வில்லிவாக்கம் பகுதியில் மதியம் 11 மணி முதல் 1 மணி வரை பரப்புரை செய்ய காவல் நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கூட்டத்தில் 300 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனாலும் பரப்புரை செய்ய காவல்துறை மிகக் குறைந்த நேரமே அனுமதி அளித்ததால், இன்றைய பரப்புரைத் திட்டத்தை ரத்து செய்வதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement