• Sep 27 2023

ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோல் கன்ஃபார்ம்...அப்போ செம சம்பவம் ரெடி போல..!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை வெளியாகிறது. கடந்த ஜனவரியில் ஷாருக்கானின் பதான் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகும் ஜவான் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


 அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தியில் உருவாகியுள்ள ஜவான் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. 


 ஜவானில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜவான் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் போதே, விஜய்யும் அதில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஜவான் படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


ஷாருக்கான் - அட்லீ இருவரும் கேட்டுக் கொண்டதால், விஜய் சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும், இந்த சீன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 


அதாவது சில நிமிடங்களே வரும் விஜய்யின் என்ட்ரி போலீஸ் கெட்டப்பில் இருக்கும் எனவும், தளபதி ரசிகர்களுக்கான தரமான சம்பவமாக இது அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாளை ஜவான் வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படத்தில் விஜய் நடித்துள்ளது மேலும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement