• Apr 17 2026

எந்த இடத்திலுமே தாய் மொழி தமிழ்ல விட்டுக் கொடுக்காதீங்க,விவேக்குக்கு அட்வைஸ்ட் பண்ணிய விஜயகாந்த்- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து இன்று காலை அவரின் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 


பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தும் விவேக்கும் சேர்ந்து தமிழ் பற்றி பெருமையாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அதில் கேப்டன் தமிழ் என்பது கண் போல அது எப்போதும் எங்க கூடவே இருக்கிறது, ஆங்கிலம் என்பது கண்ணாடி போன்றது தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை நாம போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழின் பெருமை பற்றி பேசியுள்ளார்.இந்த வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement