• Jan 19 2025

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ரசிகர் பட்டாளம்? இவை தான் காரணமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 89 வது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.

பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் தான் அர்ச்சனா. இடையில் இருந்து வந்ததாலோ என்னவோ அர்ச்சனா ஏற்கனவே இருந்த போட்டியாளர்களை விட சற்று சிறந்து விளங்கினார்.

ஆரம்பத்தில் அழுது புலம்பி நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பேசி இருந்தாலும், நாளடைவில் தன்னை முழுமையாக மாற்றி, டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது நாட்களை சிறப்பாக நகர்த்தி வந்தார்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ரசிகர் பட்டாளம்? என்ன காரணம் என்பதற்கு இன்றைய தினம் விஷ்ணுவுடன் அவர் உரையாடிய வீடியோ ஒன்றே சாட்சியாக காணப்படுகிறது. 

அதன்படி, நான் இங்க வந்தது யாரையும் ஜஜ் பண்ண இல்ல. ஆனா எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கு. அதன்படி, இத பண்ணதைங்க, அத செய்யுங்க என அறிவுரை தான் பண்ண முடியும் என தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தார்.


மேலும், மக்களை எவ்வாறு  என்டெர்டெயின்மெண்ட்  பண்ண முடியுமோ அவ்வாறே ஆடிப் பாடி, தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்.

மேலும், கடந்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அவரது அம்மா, அப்பா அர்ச்சனாவுக்கு சிறந்த அறிவுரைகளையும் கூறிச் சென்றனர். மேலும், வெளியில் அர்ச்சனாவுக்கு இருக்கும் பெயர் மதிப்பு, மற்றும் அவர் ஆரம்பத்தில் அழுத விடயங்களை சொல்லி அவரை மேலும் திடப்படுத்தியுள்ளனர்.


அதேவேளை, இன்று காலை பிக் பாஸ் வீட்டில் போடப்பட்ட படையப்பா பாடலில் உள்ள கருத்துக்களுடன் தொடர்புடையது போல விஷ்ணுவுடன் பேசியுள்ளார்.

அதேபோல், சக போட்டியாளர்களுடனும் அளவாக பேசி தனது ஆட்டத்தை நகர்த்திச் செல்லுகிறார். தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைப்பது இல்லை.

இவ்வாறு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் அர்ச்சனாவுக்கு, மேலும் ரசிகர் கூட்டம் வலுக்க அவரது பேச்சும், செயற்பாடுமே காரணமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement