• Jan 19 2025

விஜய் டிவி தான் கெத்தென ஆதாரத்துடன் காட்டிய சேனல் தரப்பு! சன் டிவிக்கு மரண பங்கம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு இடையிலான போட்டி தொடர்ந்தும் காணப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு தொலைக்காட்சி சேனல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பையும் விளம்பரங்களையும் பெறுவதற்காக போட்டி போட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகின்றன

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிற்கு எதிராகவே சன் டிவியும் புதிய புதிய சீரியல்களையும்  நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாகி வருகின்றன.


இந்த நிலையில், Urban பகுதியில் 11 தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விஜய் டிவி தான் அதிகம் பார்ப்பதாக புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங் முதல் ஐந்து இடத்திற்குள் முன்னேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement