• Sep 13 2024

கோலாகலமாக மனைவியின் வளைகாப்பு நிகழ்வைக் கொண்டாடிய விஜய் டிவி புகழ்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் அறிமுகமான பலர் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருப்பது போலத்தான் தற்போது புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடித்தட்டு மட்டத்தில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எவ்வளவோ சோதனைகளை கடந்த புகழ், தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.


 சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார். புகழுடைய காமெடியை பார்த்து பலர் தங்களுடைய சோகங்களை மறந்து மகிழ்ச்சியை கொண்டு வருவதாக கூறி வருகிறார்கள்.


புகழ் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே காதலித்து வந்த பென்ஸி ரியா என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அத்தோடு தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதையும் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.


இப்படியான நிலையில் இன்றைய தினம் தன்னுடைய மனைவியின் வளைகாப்பு நிகழ்வைக் கொண்டாடியுள்ளார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement