• Nov 22 2024

வெற்றிமாறனுக்கு ‘நோ’ சொன்ன விஜய் சேதுபதி.. ‘விடுதலை 2’ படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை 2’படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் சேதுபதியிடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வளவு நாட்கள் மொத்தமாக தன்னால் தர முடியாது என்று விஜய் சேதுபதி கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சூரி முக்கிய இடத்தில் நடிக்கும் ’விடுதலை’ என்ற படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போது அந்த பாகம் மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதியின் கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த நிலையில் விஜய் சேதுபதி கேரக்டர் பின்னணியை வைத்து இரண்டாம் பாகம் தயாரிக்க வெற்றிமாறன் திட்டமிட்டார்.

முதல் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில் இன்னும் இரண்டாம் பாகத்தின் 70% மட்டுமே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளரின் நெருக்கடி காரணமாக ஏப்ரல் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிமாறன், விஜய் சேதுபதியிடம் மொத்தமாக கால்ஷீட் கேட்டதாகவும் ஆனால் அவ்வளவு நாட்கள் மொத்தமாக தன்னால் தர முடியாது என்று விஜய் சேதுபதி கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘விடுதலை 2’ படம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ ,பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல்,சரவணன் சுப்பையா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement