• May 07 2024

தமன்னாவின் மடியில் படுத்திருந்து போஸ் கொடுத்த விஜய்..வைரலாகி வரும் கிளாமர் புகைப்படங்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் கதாநாயகியாக தமன்னா, கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

ஒன்று அவரது காதல் விவகாரம், அடுத்தது சமீபத்தில் வெளியான வெப் தொடரான 'ஜீ கர்தா'வில் அவரது தாராளா நடிப்பு, மற்றுமொன்று விரைவில் வெளியாக உள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரிலும் அவரது நெருக்கமான நடிப்பு. இந்த வெப் தொடரில் அவரது காதலர் விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

'ஜீ கர்தா' வெப் தொடரில் தமன்னா தாராளமாக நடித்த காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடரை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமும் தமன்னா - விஜய் வர்மாவை வைத்து நெருக்கமான போட்டோஷூட் எடுத்து அதையும் புரமோஷன் செய்து வருகிறது.

 “இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் ? காதலா அல்லது காமமா” என்று அந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்கள். விஜய் என்பது தமன்னாவின் காதலர் பெயரையும் குறிப்பிடும். விஜய் என்றால் ஹிந்தியில் வெற்றி என்றும் அர்த்தம். இப்படி இரு பொருள்பட பதிவிட்டுள்ளார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement