பொதுவாக விஜய் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள் என்ற நிலையில் விஜய்யின் ‘கோட்’ படத்தை வாங்க ஆள் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் பார்ப்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்று விட்டாலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது.
‘கோட்’ படத்தை ஒரு பெரிய தொகைக்கு சன் டிவி வாங்கிய நிலையில் அதன் பின்னர் என்ன காரணத்தினாலோ, திடீரென படத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து வேறு சில தொலைக்காட்சிகளில் பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அணுகிய நிலையில் ஒரு சில தொலைக்காட்சிகள் ‘கோட்’ படத்தை வாங்க மறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஒன்று ‘கோட்’ படத்தை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் மிகக் குறைந்த விலைக்கு அந்த படத்தை கேட்டதாகவும் விஜய்யை விட பல மடங்கு குறைவான மார்க்கெட் உள்ள நடிகரின் படத்திற்கு இணையான தொகையை தருவதாக கூறியதால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு குறைந்த விலைக்கு தயாரிப்பாளர் விற்பனை செய்ய முடியாது என்று கூறிவிட்டதை அடுத்த இன்னும் சாட்டிலைட் உரிமை விற்பனையாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் படத்திற்கு இந்த நிலமையா? அல்லது வேண்டுமென்றே விஜய் படத்திற்கு எதிராக செய்யப்படும் சதியா? என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!