• Jan 19 2025

ராஜி அம்மா பத்தவச்ச நெருப்பு.. கொதித்து எழுந்த சக்திவேல்.. ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் திருப்பம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ராஜிவின் அப்பாவையும் சித்தப்பாவையும் ராஜி அம்மா வெளுத்து வாங்கும் காட்சியும், இதனால் ராஜியின் சித்தப்பா கோபப்பட்டு பேசும் காட்சிகள், ராஜியின் அம்மாவை அவரது அப்பா அடிக்கும் காட்சியும் உள்ளது. இந்த பக்கம் பாண்டியன் வீட்டில் ராஜியின் மனதை தேற்றும் காட்சியும், தன்னை ஓடிப் போனவள் என்று கூறிய கோமதியை மீனா குத்தி காட்டும் காட்சிகளும் உள்ளன.

நேற்றைய எபிசோடில் ராஜியை அவரது அண்ணன் அடித்ததால் கோபப்பட்ட பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சண்டைக்கு போக, இதையடுத்து வீட்டுக்கு ஒரு வழியாக சமாதானமாக வருகின்றனர். அம்மாவுக்கு ஒன்று என்றால் யாரால் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும், நீ செய்தது சரிதான், அந்த வீட்டில் உள்ளவர்கள் தான் காட்டுமிராண்டிகள் என்று பாண்டியன் ராஜிக்கு ஆறுதல் கூறி ரெஸ்ட் எடு என்று சொல்கிறார்.

இந்த நிலையில் ராஜியின் அம்மா தன் மகளை கண்டவன் எல்லாம் அடிக்கிறான், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கணவர் முத்துவேலிடம் கேட்க அதற்கு சக்திவேல் கோபப்படுகிறார். நாங்கள் உங்களுக்கு கண்டவங்க ஆகிவிட்டோமா? உங்களை அண்ணி அல்ல அம்மா போல் பார்த்தேன்,   என் மகனை பார்த்து கண்டவங்க என்று சொல்லலாமா’ என்று கொதித்து எழுகிறார்.



’என் மகளை அடித்தவர்களை கண்டவங்க என்று தான் சொல்வேன் என்று ராஜி அம்மா மீண்டும் கூற இதனால் கோபப்படும் முத்துவேல் தனது மனைவியை அடிக்கிறார். இதனை கண்டிக்கும் அப்பத்தா மனைவியை அடிப்பது என்ன பழக்கம்? இதே பழக்கம் தான் நாளை பிள்ளைகளுக்கு வரும் என்று கூறி கண்டிக்கிறார். அதன் பிறகு முத்துவேலும் தனது மனைவியை அடித்தது குறித்து யோசிக்கிறார். மொத்தத்தில் முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் ஒற்றுமையாக இருந்த நிலையில் அவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை வரும் போல் தெரிகிறது.

இந்த நிலையில் பாண்டியன் வீட்டில் கோமதி மற்றும் மீனா உரையாடலில் ’என்னை ஓடிப் போனவள் என்று நீங்கள் சொல்லிட்டீங்களே’ என்று மீனா வருத்தப்பட, ’அது தப்புதான் நீ ஓடிப் போகவில்லை, காரில் வந்தவள் தானே’ என்று  நக்கலாக கூறும் காட்சிகளும் உள்ளன. மொத்தத்தில் முத்துவேல் குடும்பத்தில் பிரச்சனையும், பாண்டியன் குடும்பத்தில் கலகலப்பும் இருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

Advertisement

Advertisement