• Jan 19 2025

என்னை கேட்காமல் ‘கோட்’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது.. விஜய்க்கு பிரேமலதா நிபந்தனையா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் ‘கோட்’ படத்தை நான் முதலில் பார்க்க வேண்டும் என்றும் நான் பார்த்து அனுமதி அளித்த பிறகு தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜய்க்கு நிபந்தனை விதித்து உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏஐ தொழில் நுட்ப மூலம் விஜயகாந்த் நடிக்கும் சில காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் அதற்காக சமீபத்தில் பிரேமலதாவை நேரில் சந்தித்து அனுமதி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த நிலையில் ஏஐ மூலம் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் பணி முடிவடைந்து விட்டதாகவும் அந்த காட்சிகள் தற்போது எடிட்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் விஜயகாந்தின் காட்சி எப்படி இருக்கிறது என்பதை நான் பார்க்க வேண்டும் என்றும் ‘கோட்’ படத்தை தான் பார்த்து அனுமதி அளித்த பின்னர்தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என பிரேமலதா நிபந்தனை விதித்திருப்பாகவும் அதற்கு விஜய் மற்றும் வெங்கட் பிரபு தரப்பில் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜயகாந்த் காட்சியை பயன்படுத்தியதற்காக ஒரு பெரும் தொகையை கொடுக்க ‘கோட்’ குழுவினர் முன் வந்ததாகவும் ஆனால் அதை வேண்டாம் என பிரேமலதா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



மொத்தத்தில் விஜயகாந்தை கௌரவிக்கும் வகையில் மிகவும் சிறப்பாக ‘கோட்’ படத்தில் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த காட்சியை பார்த்ததும் பிரேமலதாவே எங்களை பாராட்டுவார் என்றும் வெங்கட் பிரபு உட்பட ‘கோட்’ குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement