• May 02 2024

வாரிசு படப்பிடிப்பில் நடந்த தடியடி... எங்களுக்கே இந்த நிலையா..? ஆவேசத்தில் விஜய் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'வாரிசு'. இப்படமானது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள்.  இந்தப் படத்தின் உடைய ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 


இந்நிலையில் இப்படத்தினுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்றைய தினம் சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின்உடைய அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக கூறப்படுகிறது. 


இருப்பினும் விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட்டின் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தி உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது அங்கு சென்ற 500 இற்கும் அதிகமான ரசிகர்களை, அங்கு இருந்தவர்கள் போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் போலீஸாருடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது "படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை" என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர்.

அதில் சில ரசிகர்கள் "ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும்" எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


அத்தோடு "ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை" எனவும் கத்தியுள்ளனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம் "படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது" என்ற கேள்வியும் படக்குழுவினர் தரப்பிலிருந்து எழுகிறது. 


அதுமட்டுமல்லாது "உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். 

இவ்வாறு இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி சண்டை சச்சரவுகள் மற்றும் தடியடி நடப்பதும் தேவையில்லாத ஒன்றே என சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement