• May 19 2024

பிரியாணி விருந்து வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்திய விஜய் ரசிகர் மன்றம்- வைரலாகி வரும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய்.இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து அடிக்கடி போட்டோக்களும் ரிலீஸாகிக் கொண்டிருக்கின்றது.இதனால் படக்குழு பல தடைகளை விதித்து படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றது.


பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி N.ஆனந்து Ex.MLA அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


இதில் அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.




Advertisement

Advertisement