தென்னிந்திய சினிமாவின் பிரபல ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து புதிய தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் இவர்களின் திருமணம் தடல்புடலாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் இணைந்து நடித்த படம் கீதா கோவிந்தம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே பிரபலமானது.
அதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்திலும் இவர்களின் chemistry ரசிகர்களை கவர்ந்தது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற வதந்திகள் அடிக்கடி வெளிவந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியது, வெளிநாட்டு பயணங்கள், சமூக வலைத்தள பதிவுகள் போன்றவை இந்த வதந்திகளை மேலும் வலுப்படுத்தின.
இந்நிலையில், இவர்களின் திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து, Netflix ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி வரை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இந்திய சினிமா வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்புள்ள திருமண ஆவணப்பட ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.25 கோடிக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது, "திருமண நினைவுகள் விலைமதிப்பற்றவை. அவை ரகசியமாகவும், குடும்பத்தினருடன் மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டியவை....” என்ற மனநிலையிலேயே அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
Listen News!