தென்னிந்திய சினிமாவின் பிரபல ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் நகரில், அரண்மனைச் சூழலில் அமைந்திருந்த ஒரு நட்சத்திர விடுதியில் மிகுந்த விமர்சையாக நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

திருமண விழாவைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் வருகிற மார்ச் 4-ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரவேற்பு விழா தென்னிந்திய திரையுலகின் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் இந்த விழாவிற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளனர் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி. இந்த சந்திப்பின் போது சில நிமிடங்கள் இருவரும் பிரதமருடன் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!